சினிமா பயணம் ஓங்கும் நேரத்தில் புகழுக்கு வரும் பிரச்சனை- கோபத்தில் அவரது ரசிகர்கள்

சினிமா பயணம் ஓங்கும் நேரத்தில் புகழுக்கு வரும் பிரச்சனை- கோபத்தில் அவரது ரசிகர்கள்

பல கலைஞர்களுக்கு சினிமாவில் நுழைந்த உடனே வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி அதில் இருந்து பெரிய இடத்தை நோக்கி பயணம் செய்த கலைஞர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன காமெடி காட்சிகளில் நடித்து கொஞ்சம் கொஞ்சம் மக்களால் அடையாளம் காணப்பட்டு பின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பெரிய ரீச் பெற்றவர் புகழ்.

அந்நிகழ்ச்சி அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்க இப்போது நிறைய படங்கள் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் அவரது பெயரில் டுவிட்டரில் போலி அக்கவுண்ட் செம வைரலாகி வருகிறது.

அதைப்பார்த்த புகழ் ரசிகர்கள் இப்போது தான் அவரது சினிமா பயணமே தொடங்கியுள்ளது, போலி கணக்குகளை வைத்து அவரை பிரச்சனையில் சிக்க வைக்கிறார்களே என கடும் கோபத்தில் உள்ளனர்.

LATEST News

Trending News