சீரியலில் இப்படி ஒரு மாமியாரா? வாய்ப்பே இல்ல! முக்கிய டிவி சீரியலில் அந்த நடிகை யார்?
டிவி சீரியல்கள் இப்போதெல்லாம் காதல் கதைகள் ஒரு பக்கம், குடும்ப கதைகள் மறுபக்கம் என மாறி மாறி சுழன்று கொண்டிருக்கின்றன. அது மட்டும் சண்டை இல்லாத குடும்ப சீரியலே கிடையாது. சண்டை, போட்டி, பொறாமை, கோபம், வாய்க்கு வந்த பேசும் காட்சிகளே அதிகம் காட்டப்படுகின்றன.
அதிலும் மாமியார் அல்லது மருமகளை வில்லி போல காட்டாத சீரியல்களே இல்லை எனலாம். சீரியல்களை பார்த்துவிட்டு தான் பல பெண்கள் மாமியார் என்றாலே மோசமானவர்கள் என்ற கருத்து காலம் காலமாக நிலவி வருவதுண்டு.
டிவி சேனல்களும் இந்த சீரியல் விசயத்தில் கடுமையாக போட்டியிடுகின்றன. இதில் ஜீ தமிழ் சீரியல் மாமியார் ஒருவரை திருமதி ஹிட்லர் சீரியலில் அறிமுகம் செய்கிறார்களாம். அமித் பார்கவ் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Punch'u mela punch'a pesi puncture aaki viduva! Dec 14 mudhal ungalai sandhikka varugiraal #ThirumathiHitler, watch all episodes for free anywhere anytime on #ZEE5 pic.twitter.com/g719XdaDQG
— ZEE5 Tamil (@ZEE5Tamil) December 13, 2020