காதலில் விழுந்துவிட்டாரா 'செம்பருத்தி' ஷபானா? வைரல் புகைப்படம்!

காதலில் விழுந்துவிட்டாரா 'செம்பருத்தி' ஷபானா? வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘செம்பருத்தி’ என்பதும் பிரியாராமன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த தொடரில் கார்த்தி மற்றும் ஷபானா நாயகன் நாயகியாக நடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார்த்தி இந்த தொடரில் இருந்து விலக அவருக்கு பதிலாக அக்னி நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியலில் உள்ள பலர் மாறிவிட்டாலும் ஷபானா மட்டும் இந்த சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவியில் ’பாக்கியலட்சுமி’ என்ற தொடரில் நடித்து வரும் ஆரியன் என்பவரும் ஷபானாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தற்போது ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது காதலை உறுதி செய்து உள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் எப்போது திருமணம்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES