டான்ஸ் ஆடிய டிடி மீது விழுந்த செருப்பு: வைரல் வீடியோ!

டான்ஸ் ஆடிய டிடி மீது விழுந்த செருப்பு: வைரல் வீடியோ!

பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை டிடி சமீபத்தில் டான்ஸ் ஆடியபோது அவரது குடும்பத்தினர் செருப்பை வீசிய சம்பவத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்பதும் அவரது ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் டிடி அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி தினத்தில் டிடி பதிவு செய்த ஒரு வீடியோவில் அவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது திடீரென அவரது குடும்பத்தினர் அவர் மீது செருப்பை வீசிய வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

இந்த வீடியோவில் அவர் ’விநாயகர் சதுர்த்திக்கு ஒரு ரீல் போடணும்ன்னு நெனச்சு, சரி ட்ரெண்டிங்கில் ஒன்று ட்ரை பண்ணேன். எங்க வீட்டு ரியாக்சன் இதுதான், அதை பார்த்து சிரிச்சுட்டு போங்க, செம அடி’ என்று பதிவு செய்துள்ளார்.


 

LATEST News

Trending News

HOT GALLERIES