நடிகர் தீனாவுக்குக் விரைவில் கல்யாணம்!.. மணப்பெண் யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தீனா.
இதையடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தீனா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைது, மாஸ்டர் போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தீனாவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர், அந்த பெண் கிராஃபிக் டிசைனரா வேலை செய்து வருகின்றார். எங்கள் திருமணம் அரேஞ்சுடு மேரேஜ். இனி தான் நாங்கள் காதலிக்க ஆரம்பிக்கணும் என்று கூறினார்.
