ஃபேஷன் ஷோவில் ஸ்டன்னிங் லுக்கில் நடிகை சமந்தா!! வீடியோ..
இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அந்த வகையில், சுபம் என்ற படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, வெள்ளைநிற ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவா இது என்று ஷாக்கான ரியாக்ஷனோடு ஹார்ட்டின் கொடுத்து வருகிறார்கள்.