ஆரம்பிக்கும் முன்பே முடிந்த விஜய்யின் அரசியல்? ஊடகங்களை சந்திக்கும் மனைவி சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய்! விஜய் எடுத்த முடிவு!
நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவருமான விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து வழக்கு தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, விஜய்யின் மனைவி சங்கீதா சொர்னலிங்கம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தவெக் கட்சியின் வியூகத்தை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கீதா தாக்கல் செய்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த உறவு 2021-ஆம் ஆண்டிலேயே தனக்குத் தெரிய வந்ததாகவும், அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமண நம்பிக்கையை மீறியதால் துரோகம் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வழக்கு தொடரப்பட்ட பிறகு, சென்னை நீலாங்கரையில் உள்ள தம்பதியரின் இணைந்த வீட்டில் தன்னைத் தங்க அனுமதிக்க விஜய் மறுப்பதாக சங்கீதா புதிய இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். விவாகரத்து வழக்கு முடியும் வரை அங்கு தங்குவதற்கு அனுமதி வேண்டும் என்று கோரியுள்ளார். இதனால் விஜய் தரப்பு மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு, விஜய்யை ஏப்ரல் 20, 2026 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. வழக்கு சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act) அடிப்படையில் நடைபெறுகிறது.
மகளிர் தின விழாவில் பெண்கள் நல வாக்குறுதிகளை அறிவித்த விஜய், தனிப்பட்ட விஷயங்களால் கட்சி பாதிக்கப்படக் கூடாது என்று கூறியிருந்தார். "கவலைப்படும் அளவுக்கு Worth இல்லை" என்று அவர் குறிப்பிட்டது கட்சியினரிடையேயும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக மகளிர் அணி தலைவர் ஒருவர் கூட விஜய்யின் இந்தக் கருத்தை "மதிக்கவில்லை" என்று விமர்சித்துள்ளார்.
அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாரங்கள் இந்த விவகாரம் விஜய்யின் பெண்கள் ஓட்டு வங்கியை கணிசமாக பாதிக்கும் என்கின்றனர்.
விஜய் பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம் போன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சிலர் இதை "ஆணாதிக்க மனப்பான்மை" என்றும் விமர்சிக்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு கட்சியின் உள் ஒற்றுமை, பொது இமேஜ் மற்றும் வாக்காளர் நம்பிக்கையை சோதனைக்குள்ளாக்கும்.
சங்கீதாவும் அவரது மகன் சஞ்சயும் விரைவில் ஊடகங்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மேலும் "ரகசியங்கள்" வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இது நடந்தால், விஜய்யின் அரசியல் முடிந்து போகும் வாய்ப்பு கூட உள்ளது என்றும், அவருடன் இருக்கும் அரசியல் பிரபலங்களே அவரை விட்டு பிரிந்து செல்ல வாய்ப்பு உள்ளது எனவும் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இந்த விவகாரம் வெறும் தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுமல்லாமல், விஜய்யின் அரசியல் எதிர்காலத்தையும், தவெக் கட்சியின் தேர்தல் வெற்றி வாய்ப்பையும் நேரடியாக பாதிக்கும் என்று பார்க்கப்படுகிறது.