கவர்ச்சி காட்ட நான் ரெடி.. இன்டிமேட் சீன்னாலும் ஓகே.. இயக்குநர்களுக்கு டாப்ஸி கொடுத்த ஓபன் ஆஃபர்!
சென்னை: ஆடுகளம், காஞ்சனா 2, வை ராஜா வை போன்ற ஹிட் படங்கள் மூலம் தமிழ் நெஞ்சங்களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை டாப்ஸி பண்ணு. கோலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட் பக்கம் ஒதுங்கிய டாப்ஸி, அங்கும் பெண்களை மையப்படுத்திய ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.
சமீபத்தில் டாப்ஸி நடிப்பில் வெளிவந்த 'கங்காதரி' படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பார்வையை இழந்த நிலையிலும், கடத்தப்பட்ட தன் குழந்தையை தேடி அலையும் ஒரு தாயின் போராட்டமாக உருவான இப்படத்தில், டாப்ஸியின் அசாத்திய நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கங்காதரி படத்தின் வெற்றிக்கு பிறகு, தன் மனதில் நீண்ட நாட்களாக பூட்டி வைத்திருந்த ஒரு ஆசை டாப்ஸி வெளிப்படுத்தி உள்ளார்.

டாப்ஸியின் ஓபன் டாக்: அதாவது ஒரு நடிகை ஏதோ ஒரு சீரியஸான அல்லது ஆக்ஷன் கேரக்டர்ல நடிச்சு ஹிட் குடுத்துட்டா, உடனே எல்லா டைரக்டர்களும் அதே மாதிரியான கதைகளை தூக்கிட்டு வந்துடுறாங்க. என்னை ஏன் எப்போதுமே த்ரில்லர், ஆக்ஷன், சீரியஸ் கதாபாத்திரங்களுக்குள்ளேயே பூட்டி வைக்கிறீங்க? வேற கோணத்துல என்னை வச்சு யோசிக்கவே மாட்டீங்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கவர்ச்சி & ரொமான்ஸ்: தொடர்ந்து பேசிய டாப்ஸி, எனக்கும் ஒரு அழகான, க்யூட்டான ரொமான்டிக் லவ் ஸ்டோரில நடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை இருக்கு. அதேபோல, திரையில் தாராள கவர்ச்சி காட்டி, ரொமான்டிக் அண்ட் இன்டிமேட் சீன்களில் நடிக்க வேண்டும் என்பதும் என் நீண்ட நாள் விருப்பம். திரையுலகில் எத்தனையோ காதல் படங்கள் வெளியாகின்றன. ஆனால், என்னை வைத்து மட்டும் ஏன் ஒரு அழகான காதல் கதையை யாரும் யோசிக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தன்னை பழைய சீரியஸ் டாப்ஸியாக இல்லாமல், முழுக்க முழுக்க ஒரு கிளாமரான, காதல் நாயகியாக காட்டக்கூடிய நல்ல ரொமான்டிக் கதைகளுக்காகக் காத்திருப்பதாக நடிகை டாப்ஸி பண்ணு அந்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.