நேத்து பக்தி பரவசம்.. இன்னைக்கு கவர்ச்சி அவதாரம்.. நெட்டிசன்களை கிறங்கடித்த நடிகை கிரண்!
சென்னை: தமிழ் சினிமாவில் சீயான் விக்ரம் ஜோடியாக ஜெமினி படத்தில் அறிமுகமாகி, தனது சுண்டெலி கண்ணாலும் பேரழகாலும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தவர் மும்பை வரவான நடிகை கிரண். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் அதிரடி கவர்ச்சி காட்டி உள்ளார்
ஹிட் படங்களில்: நடிகை கிரண் ஆரம்பத்திலேயே ஜெமினி, அன்பே சிவம், வின்னர் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். ஆனால், உச்சத்தில் இருந்த கிரணுக்கு காலப்போக்கில் எதிர்பாராத விதமாக சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கின. கதாநாயகி வாய்ப்புகள் பறிபோனதை தொடர்ந்து, சில படங்களில் சிறப்பு பாடல்களுக்குக் கவர்ச்சி நடனமாடியும், ஆண்டி வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். ஆனால், அதிலும் பெரிய அளவில் பிரேக் கிடைக்கவில்லை.

இன்ஸ்டா பேரரசி: தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாததால், தனது வாழ்வாதாரத்திற்காகவும் வருமானத்திற்காகவும் சோஷியல் மீடியாவை மட்டுமே முழுமையாக நம்பியுள்ளார் கிரண். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளுக்கு நாள் கவர்ச்சியின் எல்லைக்கே சென்று போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களைதன் வசப்படுத்தி வருகிறார்.
இன்றைய கவர்ச்சி புயல்: இந்நிலையில், நடிகை கிரணின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவுகள் சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தி இருக்கிறார். நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அழகிய மஞ்சள் நிறச் புடவையில் பக்தி திருமகளாக காட்சியளித்தார் கிரண். பாரம்பரிய உடையில் பக்தியுடன் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால், அடுத்த நாளே,இன்று கடற்கரையில் கருப்பு நிற பிகினி உடையில் அலையடிக்கும் அலைகளுக்கு நடுவே அமர்ந்து, கடற்கரையே சூடாகும் அளவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பிகினி க்ளிக்ஸ்: நேற்று குடும்ப பெண்ணாக புடவையில் வந்துவிட்டு, இன்று திடீரென பிகினியில் தாராளக் கவர்ச்சி காட்டியுள்ள கிரணின் இந்த அதிரடி மாற்றத்தை பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்துப் போயி, கமெண்ட் பாக்ஸில் நேத்து அப்படி... இன்னைக்கு இப்படியா சோஷியல் மீடியாவில் கிண்டலாகவும் கமெண்ட்களைப் பொழிந்து வருகின்றனர். எது எப்படியோ, கிரணின் இந்த பிகினி க்ளிக்ஸ் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது,