ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக போகும் மூக்குத்தி அம்மன் சீரியல்.. கதாநாயகி இவரா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் 'மூக்குத்தி அம்மன்' எனும் தலைப்பில் புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், அந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கப்போகும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ்
சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாக ஜீ தமிழ் உள்ளது. இதில் கார்த்திகை தீபம், வாகை சூடவா, திருமாங்கல்யம், அயலி, வீரா உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

மூக்குத்தி அம்மன்
இந்நிலையில், புதிதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'மூக்குத்தி அம்மன்' எனும் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவை ஏற்கனவே ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது. ஆனால், ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் எப்போது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சீரியலில் அம்மன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை நித்யா தாஸ் நடிக்கிறார் என்பதை ப்ரோமோவில் உறுதி செய்துள்ளனர். மேலும், சின்னத்திரையில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்ரீகுமார் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

கதாநாயகி
இந்நிலையில், மூக்குத்தி அம்மன் சீரியலில் கதாநாயகியாக நடிக்கப்போகும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'வீரா' சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்களின் மனதை வென்ற, நடிகை வைஷ்ணவி தான், மூக்குத்தி அம்மன் சீரியலில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்
வீரா சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை வைஷ்ணவி, புதிய சீரியலில் கதாநாயகியாக நடிப்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதனால், மூக்குத்தி அம்மன் சீரியலை மிகவிரைவில் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
