டைட்டில் ரோலில் நடிக்கும் காஜல் அகர்வால்: இயக்குனர் இவர் தான்!

டைட்டில் ரோலில் நடிக்கும் காஜல் அகர்வால்: இயக்குனர் இவர் தான்!

பொதுவாக நடிகைகள் டைட்டில் ரோலில் நடிப்பது மிகவும் அரிதான நிகழ்வாக இருந்து வரும் நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது டைட்டில் ரோலில் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

நடிகை காஜல் அகர்வால் ’உமா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் உமா கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விளம்பர படங்களை இயக்கிய தாதாகாதா சின்ஹா (Tathagata Singha) என்பவர் இயக்க உள்ளதாகவும் அவிஷேக் கோஷ் என்பவர் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது மேலும் கொரோனா வைரஸ் லாக்டவுன் முடிவுக்கு வந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படத்திற்காக மொத்தமாக காஜல் அகர்வால் கால்சீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதால் இந்த படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காஜல் அகர்வால் ஏற்கனவே கமல்ஹாசன் நடிக்கும் ’இந்தியன் 2’ நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ‘ஹே சினாமிகா’, சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சார்யா’ மற்றும் ’கோஸ்டி’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News