பிரபுதேவாவுக்காக குவிந்த 8 ஹீரோயின்கள்.. பஹீரா படம் போல இருக்கே.. ஆர்யா மனைவி செம ஆட்டம்!
சென்னை: பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. லெஜண்ட் சரவணா லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு 8 ஹீரோயின்களை அழைத்து நிகழ்ச்சியை நடத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இன்று லெஜண்ட் சரவணாவின் லீடர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த பஹீரா படத்தில் 8 நடிகைகள் நடித்திருந்தனர். பலரையும் சைக்கோத் தனமாக அவர் கொலை செய்வதை பார்த்து ரசிகர்கள் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை பார்க்கும் போதும் திடீரென பிரபுதேவா சைக்கோவாக மாறிவிடுவாரோ என பயந்தனர்.
சுமார் 8 நடிகைகள் ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 'ரீசார்ஜ் 26' நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பக்காவாக நடனமாடியுள்ளனர்.
ஸ்ரேயா முதல் சம்யுக்தா சண்முகநாதன் வரை: நடிகைகள் ஸ்ரேயா, சாயிஷா, சான்வி மேக்னா, யாஷிகா ஆனந்த், சம்யுக்தா சண்முகநாதன், நிக்கி கல்ராணி, கிகி விஜய் மற்றும் அனுக்ரீத்தி வாஸ் உள்ளிட்ட நடிகைகள் கல்லூரியில் கவர்ச்சி உடையில் பிரபுதேவாவுடன் இணைந்து செம டான்ஸ் ஆடியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் மாணவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
https://www.instagram.com/reel/DWbErxPDi7v/
ஆர்யா மனைவி: இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட சம்யுக்தா சண்முகநாதன் இந்த கேங்கில் இணைந்துக் கொண்டு செம டான்ஸ் போட்டுள்ளார். மேலும், திருமணத்துக்குப் பிறகு வீட்டிலேயே நடனமாடிக் கொண்டிருந்த நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவும் பிரபுதேவாவுக்கு செம டஃப் கொடுக்கும் விதமாக நடனமாடிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
https://www.instagram.com/reel/DWa7ujQDk0x/