'குக் வித் கோமாளி' சீசன் 3 எப்போது? குட்டீஸ்களிடம் தகவல் சொன்ன புகழ்

'குக் வித் கோமாளி' சீசன் 3 எப்போது? குட்டீஸ்களிடம் தகவல் சொன்ன புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய இரண்டுமே பெரிய அளவில் பிரபலமானது என்பதும் குறிப்பாக சீசன் 2 யாருமே எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில், வேற லெவலில் பிரபலமானது என்பது தெரிந்ததே

’குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’கள், கோமாளிகள் ஆகியவர்கள் வேற லெவலில் பிரபலமாகி தற்போது அதில் சிலர் சினிமாவிலும் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ சீசன் 3 எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 நிகழ்ச்சியை விட மிகப் பெரிய அளவில் இந்த நிகழ்ச்சிக்குத்தான் எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது குட்டீஸ் ரசிகர்களிடம் பேசும்போது இன்னும் மூன்று மாதங்களில் ’குக் வித் கோமாளி’ சீசன் 3 தொடங்கிவிடும் என்று கூறியுள்ளார். இதனை அந்த குட்டீஸ்கள் சமூக வலைதளங்களில் கூறியுள்ளதை அடுத்து அடுத்த சீசனை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES