கிளாமர், இன்டிமேட் சீனுக்கு நான் ரெடி!! தன் ஆசையை சொன்ன நடிகை டாப்ஸி..
டாப்ஸி
பாலிவுட்டில் போல்ட்டான நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி நடிப்பில் வெளியான கங்காதரி படம் தற்போது ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் டாப்ஸி அளித்த பேட்டியில், ஒரு நடிகை ஒரு சீரியஸான, ஆக்ஷன் ரோலில் நடித்து ஹிட் கொடுத்தால், அதேமாதிரியான கதையை தூக்கிட்டு வந்துவிடுகிறார்கள்.

என்னை ஏன் எப்போதுமே திரில்லர், அக்ஷன், சீரியஸான ரோலில் பூட்டி வைக்கிறீங்க, வேற கோணத்துல என்னை வைத்து யோசிக்கவே மாட்டீங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளாமர், இன்டிமேட்ன்
மேலும், எனக்கும் ஒரு அழகான, ரொமாண்டிக் லவ் ஸ்டோரியில் நடிக்கணும்னு ஆசை. திரையில் தாராள கவர்ச்சி காட்டி, ரொமாண்டிக் அண்ட் இண்டிமேட் சீன்களில் நடிக்க வேண்டும் என்று எனது நீண்ட நாள் ஆசை.
திரையுலகில் எத்தனையோ காதல் படங்கள் வெளியாகிறது. ஆனால் என்னை வைத்து மட்டும் ஏன் ஒரு அழகான காதல் கதையை யாரும் யோசிக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னை பழைய சீரியஸ் டாப்ஸியாக இல்லாமல் முழுக்கமுழுக்க ஒரு கிளாமரான, காதல் நாயகியாக காட்டக்கூடிய நல்ல ரொமாண்டிக் கதைகளுக்காக நான் காத்திருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.