மீண்டும் விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியில் டிடி, அதுவும் யாருடன் பாருங்க
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி தான் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் பல முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.
இவரை தற்போது அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. ஆனால் சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்களுடன் இணைந்த உள்ளார்.
இந்நிலையில் தற்போது டிடி விஜய் டிவி யின் முக்கிய நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். ஆம் காபி வித் டிடி நிகழ்ச்சியை மீண்டும் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். அவரின் நெற்றிக்கண் படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் கலந்து கொண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.