பிக்பாஸ் 5-யில் இந்த மாறி இனி பேசுங்க... கமலுக்கு கோரிக்கை விடுத்த பிரபல ரிவி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது? வரும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நான்காவது சீசன் தாமதமாக ஆரம்பித்தது போலவே ஐந்தாவது சீசனும் தாமதமாக ஆரம்பிக்க உள்ளது. அனேகமாக அக்டோபர் மாதம் இந்த சீசன் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் ஐந்தாவது சீசனுக்கான லோகோ மற்றும் புதிய டேக்லைன் தயாராகி விட்டதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, கமலஹாசனின் தொகுத்து வழங்கும் முறையில் தலையிடாத விஜய் டிவி இந்த முறை கமலஹாசனுக்கு சில டிப்ஸ் கொடுத்துள்ளதாம்... அதில், வழக்கம்போல் இல்லாமல் இந்த முறை ரசிகர்கள் ரசிக்கும்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூறிவிட்டார்களாம்.
அதற்கு வேறு ஒன்றும் செய்ய வேண்டாம், தூய தமிழில் பேசி மக்களை குழப்பாமல் சாதாரண தமிழில் பேசி எதார்த்தமாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர் விஜய் டிவி வட்டாரங்கள்.