"எப்படி வாழ்ந்த பையன்.. அண்டாவ கழுவ விட்டாங்களே!" - பிரியங்கா யாரை கலாய்ச்சிருக்காங்க பாருங்க!

"எப்படி வாழ்ந்த பையன்.. அண்டாவ கழுவ விட்டாங்களே!" - பிரியங்கா யாரை கலாய்ச்சிருக்காங்க பாருங்க!

பிக்பாஸ் வீட்டுக்குள் பிரியங்கா, பிக்பாஸையே நேரடியாக கலாய்க்கும் ஒரே வல்லமை படைத்தவர்.

 

முன்னதாக பிக்பாஸூக்கு பலரும் செல்லப் பெயரை வைத்துக்கொண்டிருந்த போது கூட பிரியங்கா பிக்பாஸை ‘பெருசு’ என்று அழைக்கத் தொடங்கியது வைரலானது. தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் பிரியங்கா கலகலவென பேசிக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் டாஸ்க் என்று வந்துவிட்டால் அந்த டாஸ்க் சூடு பிடிப்பதற்கும் காரணமான தீவிரமான விளையாட்டையும் விளையாடக் கூடியவர்.

priyanka teases varun biggbosstamil5 பிரியங்கா வருண்

அதே சமயம் ஒவ்வொரு போட்டியாளர்களையும் பாரபட்சமின்றி கலாய்த்து தள்ளும் பிரியங்கா தற்போது வருணை கலாய்த்திருக்கிறார். வருண் கிச்சனில் பாத்திரம் கழுவி கொண்டிருந்ததை பார்த்த பிரியங்கா, எப்படி "எப்படி வாழ்ந்த பையன்.. அண்டாவ கழுவ விட்டாங்களே!" என்று கலாய்க்கத் தொடங்கிவிட்டார்.

priyanka teases varun biggbosstamil5 பிரியங்கா வருண்

வருணை பொருத்தவரை தற்போது கவுதம் மேனன் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் உறவினரும், திரைத்துறை மற்றும் கல்வி நிறுவன பிரபலமான ஐசரி வேலனின் பேரனுமான வருண், பிக்பாஸ் வீட்டுக்குள் கலந்து கொண்டு இன்னும் மக்களிடையே ரீச் ஆக வேண்டும் என்கிற காரணத்துக்காக பிக்பாஸ் போட்டியில் விளையாண்டு கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News