ஷிவானி நாராயணன் வீட்டுக்கு வந்த புதிய உறுப்பினர்: வைரல் புகைப்படங்கள்!

ஷிவானி நாராயணன் வீட்டுக்கு வந்த புதிய உறுப்பினர்: வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய வீட்டிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் வந்திருப்பதாக புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவானி நாராயணன் சிங்கப்பெண்ணாக வெளியேறினார் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடித்து வரும் ’விக்ரம்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவானி நாராயணன் பல கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும், அந்த வகையில் அவர் தனது வீட்டிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் வந்திருப்பதாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுதான் அவர் புதிதாக வளர்க்க இருக்கும் செல்ல நாய் குட்டி. ஏற்கனவே அவர் இரண்டு நாய்க் குட்டிகளை வளர்த்து வரும் நிலையில் தற்போது புதிய நாய்க்குட்டி ஒன்று வாங்கி வளர்க்க உள்ளார் என்பதும் அதை கையில் தூக்கி வைத்துக்கொண்டு காட்டும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News