முன்னணி இயக்குனரால் கர்ப்பம்: டிவி நிகழ்ச்சியில் கண்ணீருடன் தெரிவித்த நடிகை!
முன்னணி இயக்குனர் ஒருவரால் தான் கர்ப்பமடைந்ததாகவும் ஆனால் அந்த இயக்குனரின் வற்புறுத்தல் காரணமாக கர்ப்பத்தை கலைத்ததாகவும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் கண்ணீருடன் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் பாலிவுட் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான மந்தனா என்பவர் சமீபத்தில் கங்கனா ரனாவத் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ஈரான் நாட்டைச் சேர்ந்த மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றுக் கொண்டார் .
இந்த நிலையில் கங்கனா ரனாவத் நடத்தும் ‘லாக் அப்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மந்தனாவிடம், ‘உங்களிடம் உள்ள ஒரு ரகசியத்தை பற்றி கூறுங்கள் எனக் கேட்டபோது மந்தனா, ‘தனக்கு முன்னணி இயக்குனர் ஒருவருடன் இருந்த ரகசிய உறவை வெளிப்படுத்தினார். எங்கள் இருவருக்கும் இடையே சில மாதங்கள் உறவுகள் வலுப்பெற்றன என்றும், அவர் என்னுடன் தொடர்ந்து வாழ ஆசைப்பட்டார் என்றும், இந்த நிலையில் திடீரென நான் கர்ப்பம் அடைந்ததால் அதை கேட்டு அந்த இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார் என்றும், அவருடைய வற்புறுத்தலின் காரணமாக நான் கர்ப்பத்தை கலைக்கும் முடிவுக்கு சென்றேன் என்று அந்த நிகழ்ச்சியில் கண்ணீருடன் கூறினார்.

அவரது பேச்சைக் கேட்டு கங்கனாவும் கண்கலங்கினார். இந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.