புதிய கார் வாங்கிய விஜய் டிவியின் இன்னொரு பிரபலம்!

புதிய கார் வாங்கிய விஜய் டிவியின் இன்னொரு பிரபலம்!

விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். அதேபோல் விஜய் டிவியில் பிரபலமாகி வருபவர்கள் சொந்தகாரும் வாங்கி வருகிறார்கள்

அந்த வகையில் விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ பிரபலம் புகழ் கார் வாங்கினார். அதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் மற்றும் தாடி பாலாஜி அடுத்தடுத்து கார்களை வாங்கினர். இதனை அடுத்து குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை மற்றும் ஜாக்லின் கார் வாங்கினார்கள். அதேபோல் ’கலக்கப்போவது யாரு’ பிரபலமான சரத் புதிய கார் வாங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேப்ரில்லா புதிய கார் வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த கேப்ரில்லா அதில் கூறியிருப்பதாவது:

பல மாதங்கள் யோசித்துவிட்டு இறுதியாக ஒரு புதிய காரை வாங்க முடிவு செய்தேன். டாடா ஹாரியர் டார்க் எடிஷன் காரை நான் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் அன்பும், ஆதரவினால் தான் இது சாத்தியமானது’ என்று பதிவு செய்துள்ளார்.

புதிய கார் வாங்கிய கேப்ரில்லாவுக்கு ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆஜித் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES