மாலத்தீவில் செம ரொமான்ஸ்.. சமீபத்தில் திருமணமான நட்சத்திர தம்பதிகளின் க்யூட் புகைப்படங்கள்!

மாலத்தீவில் செம ரொமான்ஸ்.. சமீபத்தில் திருமணமான நட்சத்திர தம்பதிகளின் க்யூட் புகைப்படங்கள்!

சின்னத்திரை தொடர்களில் ஜோடியாக நடிக்கும் பல நட்சத்திரங்கள் நிஜத்திலும் ஜோடி ஆகி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆல்யா மானசா -சஞ்சய், சேத்தன் -தேவதர்ஷினி, ராஜ்கமல் -லதா ராவ், செந்தில்- ஸ்ரீஜா, ரக்ஷிதா - தினேஷ் ,ஆலியா- சஞ்சீவ் உள்பட பல நட்சத்திரங்கள் நிஜத்திலும் தம்பதிகளாகியுள்ளனர்.

அந்த வகையில் ’திருமணம்’ என்ற சீரியலில் நடித்த நடிகர் சித்து, அந்த தொடரின் நாயகியான ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தில் பல சின்னத் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் 

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தற்போது ’ராஜா ராணி 2’ என்ற தொடரில் சித்து நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் ’ரஜினி’ என்ற தொடரில் ஸ்ரேயா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் திருமணமான சித்து - ஸ்ரேயா ஜோடி தற்போது மாலத்தீவு சென்றுள்ள நிலையில் அங்கிருந்து ரொமான்ஸ் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். குறிப்பாக ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் க்யூட்டாக இருப்பதாக கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES