படிப்பு தான் முக்கியம்.. பிக் பாஸ் சர்ச்சைக்கு அஜித் கொடுத்த பதில்.

படிப்பு தான் முக்கியம்.. பிக் பாஸ் சர்ச்சைக்கு அஜித் கொடுத்த பதில்.

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா - விசித்ரா இடையே கடும் மோதல் ஏற்பட்டது. படிப்பு அனைவருக்கும் ரொம்ப முக்கியமான விஷயம் என விசித்ரா கூறினார்.

படிப்பு தான் முக்கியம்.. பிக் பாஸ் சர்ச்சைக்கு அஜித் கொடுத்த பதில் | Ajith About Education

ஆனால், தன்னுடைய படிப்பு குறித்து பேச வேண்டாம் என கோபத்துடன் ஜோவிகா கூற, வாக்குவாதம் கடுமையானது. சிலர் ஜோவிகா பேசியது சரி தான் என கூறி வருகிறார்கள். ஆனால், பலரும் விசித்ரா பேசியதில் எந்த ஒரு தவறும் இல்லை என அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில், படிப்பு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து நடிகர் அஜித் பேசிய பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் 'படிப்பு மிகவும் அவசியம், நான் 10ம் வகுப்பு வரை தான் படித்து இருக்கிறேன். அடிபட்டு நிறைய காத்துக்கிட்டேன். படிப்பு அறிவு, பட்ட அறிவு என கூறுவார்கள். நான் பட்டு தான் கற்றுக்கொண்டேன்'.

படிப்பு தான் முக்கியம்.. பிக் பாஸ் சர்ச்சைக்கு அஜித் கொடுத்த பதில் | Ajith About Education'அது யாருக்கும் வேண்டாம், ரொம்ப கடினமான வழி. இப்போ நான் உணருகிறேன் ஏன் படிக்கவில்லை என்று. அப்போது எனக்கு படிப்பு ஏறவில்லை, அது வேறு விஷயம். ஆனால், இன்று நான் உணருகிறேன் படித்து இருந்திருக்கலாமோ என்று' என பேசியிருக்கிறார்.

அஜித் பேசிய இந்த பழைய ஆடியோ, பிக் பாஸ் சர்ச்சைக்கு பின் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.   

LATEST News

Trending News

HOT GALLERIES