நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த விசித்ரா! பலரும் பார்த்திராத வைரல் புகைப்படம்.
தமிழ் சினிமா துறையில் 90களில் பிரபல நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை விசித்ரா. இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் மாத்திரமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் 1991ம் ஆண்டு தமிழ் படம் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளார்.

படங்களில் நடிப்பதையும் தாண்டி மாமி சின்ன மானி, வாழ்க்கை, ராசாத்தி, ஆனந்தி, கல்யாணி மலையாளம், கீதா கோவிந்தம் தெலுங்கு போன்ற தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

குணச்சித்திர வேடங்களிலும் காமெடியாகவும் அந்த காலகட்டத்தில் அதிகப்படியான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த விசித்திரா திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் பிஸியாகவே இருந்து வந்தார்.
தற்போது தனது உடல் வாக்குக்கு ஏற்ற கதாப்பாத்திரம் கிடைத்தால் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க தயாராக இருக்கும் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 தமிழில் கலந்துக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளார்.

இந்நிலையில் இவரின் இளம் பருவத்தில் பிகினி மற்றும் நீச்சல் உடையில் காணப்படும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவிவருகின்றது.
அப்பவே அப்படியா?என ரசிகர்கள் பலரும் விசித்ராவை கலாய்த்து வருகின்றனர்.