காதலனால் விளையாட முடியாமல் தவிக்கும் ரவீனா... மூளையில்லாத முட்டாள் பயலா இருக்கான்! கொந்தளிக்கும் போட்டியாளர்கள்
ரவீனா மணி சந்திரா இடையே காதல் என்று கூறப்படும் நிலையில், இன்று பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் இருவருக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த வாரத்திற்கான தலைவராக பூர்ணிமா இருந்து வரும் நிலையில், இன்று பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ளார்.
இந்த டாஸ்கில் ரவீனா மணிசந்திராவிற்கு டிஸ்லைக்கும், பிரதீப்பிற்கு லைக்கும் கொடுத்துள்ளது மனஸ்தாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவீனா தனது விளையாட்டில் சரியாக விளையாடினாலும் ரவி சந்திரா அவரை மனமாற்றம் செய்வது சக போட்டியாளர்களுக்கு பிடிக்காமல் திட்டித் தீர்த்து வருகின்றனர்.