சிவப்பு கம்பள வரவேற்புடன் உள்ளே நுழையும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! பிரதீப்பை நினைத்து கதிகலங்கிய பிக் பாஸ் வீடு.

சிவப்பு கம்பள வரவேற்புடன் உள்ளே நுழையும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! பிரதீப்பை நினைத்து கதிகலங்கிய பிக் பாஸ் வீடு.

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் சிவப்பு கம்பள வரவேற்புடன் பிக்பாஸிற்குள் வருவார்கள் என்று பிக்பாஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது 50 நாளை கடந்து செல்லும் பிக் பாஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது. ஆம் இன்று வைக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சிவப்பு கம்பள வரவேற்புடன் உள்ளே நுழையும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! பிரதீப்பை நினைத்து கதிகலங்கிய பிக் பாஸ் வீடு | Tamil Bigg Boss 7 Re Entry Ex Contestantஆம் மூன்று போட்டிகள் பூகம்பமாக வரும் நிலையில், இதில் தோல்வியை சந்திக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் வேறு போட்டியாளர்கள் வருவதாக கூறப்பட்டது.

அந்த போட்டியாளர்கள் யார் என்றால் இதுவரை வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் 3 பேர் உள்ளே வருவார்கள் என்று பிக் பாஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

LATEST News

Trending News