வினுஷா இதனால் தான் பிக் பாஸ் போகல... வெளியான போட்டோ

வினுஷா இதனால் தான் பிக் பாஸ் போகல... வெளியான போட்டோ

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை வினுஷா பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் ஷோவில் இருப்பதே தெரியாத அளவுக்கு தான் இருந்தது. அதனால் அவர் ஒருகட்டத்தில் எலிமினேட் ஆகிவிட்டார்.

அவர் எலிமினேட் ஆகி வெளியில் வந்த பின் தான் நிக்சன் அவரது உடலை பற்றி மிகவும் மோசமாக பேசி இருந்தது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார். நிக்சன் பற்றி கோபமாக அவர் வெளியிட்ட அறிக்கையும் வைரல் ஆனது.

வினுஷா இதனால் தான் பிக் பாஸ் போகல? வெளியான போட்டோ | Why Vinusha Didnt Re Enter Bigg Boss 7 Tamil

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் மூன்று பழைய போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர இருக்கிறார்கள் என அறிவிப்பு வந்ததும், அதில் வினுஷாவும் உள்ளே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் வர்மா மற்றும் அனன்யா ஆகியோர் மட்டுமே வந்திருக்கின்றனர்.

வினுஷா வீட்டில் இல்லை என்றாலும், தற்போது அர்ச்சனா தான் வினுஷா பெயரை சொல்லி நிக்சனை விளாசி வருகிறார். இதனால் ஷோவே பரபரப்பாக மாறி இருக்கிறது. வினுஷா பற்றி பேசும் அர்ச்சனாவை சொருகிடுவேன் என நிக்சன் கொலை மிரட்டல் விடுத்ததும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் வினுஷா தான் ஏன் பிக் பாஸ் செல்லவில்லை என்ற காரணத்தை கூறி இருக்கிறார். அவர் ஹாஸ்பிடலில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அவர் உடல்நிலை காரணமாக தான் பிக் பாஸ் செல்லவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. 

வினுஷா இதனால் தான் பிக் பாஸ் போகல? வெளியான போட்டோ | Why Vinusha Didnt Re Enter Bigg Boss 7 Tamil

LATEST News

Trending News