முதன் முறையாக நீச்சல் உடையில் பிரியங்கா மோகன்.. என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்.. மிரண்டு போன ரசிகர்கள்..!
தமிழில் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா மோகன்.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர்.
நடிகர் விஜயின் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ஒப்பந்தமானது நடிகை பிரியங்கா மோகன் தான். ஆனால், கடைசி நேரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா இடையில் புகுந்து வாரிசு பட வாய்ப்பை தட்டி தூக்கினார்.
இந்த விவகாரம் அந்த நேரத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. ஆனால், இதற்கெல்லாம் பதில் அளிக்காமல் நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் எனக்கு வேலையே இல்லை என்று தெரியும் ஆனால் விஜய் படம் என்பதற்காக அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த படத்தில் நான் ஹீரோயினாக நடித்தேன் என கூறியிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் வேல்மதி என்ற கதாபாத்திரத்திலும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படத்தில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு தோல்வி படங்களாக அமைந்தன. மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் தயாரித்து இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கோல்டன் ஸ்பேரோ என்ற பாடலில் ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் தற்போது நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் OG திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். முன்னணி நடிகைகள் பலரும் திரைப்படங்களில் எந்த அளவுக்கு கவனம் கவனம் செலுத்துகிறார்களோ அதே அளவுக்கு வெப் சீரியஸ்களிலும் கவனம் செலுத்துகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் சினிமாவில் நடிப்பதற்கு வாங்கக்கூடிய சம்பளத்தை வெப் சீரிஸ்களிலும் வாங்க முடிகிறது. அதேநேரம் ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைகிறது என்ற காரணம்தான்
இந்நிலையில், தெலுங்கு மொழியை முழுமையாக கொண்டு உருவாகவுள்ள ஆக்சன் திரில்லர் வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் அந்த படத்தில் நடிக்க உள்ள மூன்று கதாநாயகிகளில் ஒருவராக கமிட்டாகி இருக்கிறார்.
மட்டுமில்லாமல் முதன்முறையாக நீச்சல் உடைகள் சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து தோல்வி படங்களாக அமைந்து வரும் நிலையில் பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் அம்மணி நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதை அறிந்த ரசிகர்கள் என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம் என மிரண்டு போய் இருக்கிறார்கள்