சிக்ஸ்பேக்கில் அல்லு அர்ஜுனுக்கே டஃப் கொடுக்கும் மனைவி சினேகா ரெட்டி!! புகைப்படங்கள் இதோ..
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அல்லு அர்ஜுன், தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமான முறையில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2010ல் அல்லு அர்ஜுன், சினேகா ரெட்டியை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றார்.

சமீபத்தில் தங்களின் 15வது ஆண்டு திருமணநாளை கொண்டாடினர். அதேநாளில் தான் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ் திருமணமும் நடந்தது.
திருமணநாளன்று தன்னுடைய மனைவி சினேகாவிற்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக அளித்தார் அல்லு அர்ஜுன். தற்போது 41 வயதாக சினேகா ரெட்டி இந்த வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில் ஜிம்மில் ஒர்க்கவுட் எடுத்த போது தன்னுடைய சிக்ஸ்பேக்கை காட்டி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
