அந்த நேரத்துல உடம்புல பொட்டு துணி இல்லாம உக்காந்துட்டு இருப்பேன்.. நடிகை பிரிகிடா சாகா ஓப்பன் டாக்..!
பிரபல இளம் நடிகை பிரகிடா சாகா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் மற்றும் 'இரவின் நிழல்' படத்தில் ஆடையின்றி நடித்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
19 வயதிலேயே டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததால், தன்னை பலரும் 25 வயதை தாண்டிய பெண்ணாக நினைத்ததாக அவர் கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பிரகிடா சாகா பேட்டியில் கூறியதாவது, "நான் 19 வயதிலேயே டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததால், பலரும் நான் 25 வயதை தாண்டிய ஒரு பெண்ணாக இருப்பேன் என்று நினைத்துக் கொண்டனர்.
ஆனால் நான் பவித்ரா டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது என்னுடைய வயது 19 தான். அதன்பிறகு 'இரவின் நிழல்' திரைப்படத்தில் நடித்தேன். அதுதான் என்னுடைய அறிமுகப்படம் என்றெல்லாம் இல்லை. ஏற்கனவே நான் நிறைய வெப் சீரிஸ்களில் நடித்திருக்கிறேன்.
அதை தாண்டி நான் ஒரு நல்ல டான்சர். அதனால் கேமரா பயம் எல்லாம் எனக்கு சுத்தமாக கிடையாது." என்று தன்னுடைய ஆரம்ப கால திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், 'இரவின் நிழல்' படத்தில் ஆடையின்றி நடித்தது குறித்து அவர் கூறுகையில், " 'இரவின் நிழல்' படத்தில் நான் ஆடை இன்றி நடிக்க வேண்டிய சில காட்சிகள் இருக்கிறது என்று சொன்னபோது, அது எப்படியான சூழ்நிலை என்ற விவாதம் தான் முதலில் நடைபெற்றது.
அப்படியான சூழ்நிலையில் நான் எந்த மாதிரியான மனநிலையில் இருப்பேன், அந்த காட்சியை பார்க்கும் போது ரசிகர்கள் என்ன மாதிரியான மனநிலையில் இருப்பார்கள் என்றெல்லாம் பேசினோம்.
அந்த இடத்தில் நான் ஆடையின்றி உடம்பில் பொட்டு துணி இன்றி அமர்ந்திருக்கிறேன் எனும் பொழுது கண்டிப்பாக அதனை யாருமே ஆபாசமாக பார்க்க வாய்ப்பில்லை என்ற புரிதல் எனக்கு வந்த பிறகுதான் அந்த காட்சியில் நடித்தேன்," என்று ஆடை இல்லாத காட்சியில் நடித்ததற்கான காரணத்தையும், அந்த காட்சி ஆபாசமாக இருக்காது என்ற புரிதல் தனக்கு ஏற்பட்டதையும் விளக்கினார்.
பிரகிடா சாகா, இளம் வயதிலேயே முதிர்ச்சியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது மற்றும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்க தயங்காதது போன்ற விஷயங்கள் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
அவரது இந்த வெளிப்படையான பேச்சு மற்றும் துணிச்சலான நடிப்பு குறித்து ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
                         
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        