வசூல் வேட்டையாடும் டிராகன்!! 11 நாளில் இத்தனை கோடியா?
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், விஜே சுத்து உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் டிராகன்.
மிகப்பெரிய ஆதரவையும் விமர்சனத்தையும் பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் டிராகன் படம் கடந்த வாரம் 50 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இந்நிலையில் படம் வெளியாகி 11 நாட்களான நிலையில் டிராகன் படம் சுமார் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் நடித்து இயக்கிய லவ் டுடே படமும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
தற்போது டிராகன் படமும் 100 கோடி பாக்ஸ் ஆபிஸை எட்டிய நிலையில் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.