திடீரென விஜய் வெளியிட்ட வீடியோ.. எதற்காக தெரியுமா, இதோ பாருங்க..
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் கடந்த ஆண்டு தனது அரசியல் எண்ட்ரியை அறிவித்தார்.
அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலகப்போவதாகவும், ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜூன் மாதத்துடன் நிறைவு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இப்தார் நோன்பு திறக்கும் விழாவில் இஸ்லாமிய நண்பர்களுடன் பங்கேற்றார். இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் "என்னுடைய அம்மா, அக்கா, தோழி அனைவருக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுடன் ஒரு அண்ணனாக, மகனாக, தோழனாக நான் நிற்பேன்" என கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தை ஆண்டு வரும் திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு தரவில்லை என்றும் 2026ல் இந்த அரசை மாற்றி அமைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ..
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2025
 
                         
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        