நேரில் சென்ற விஜய்.. போலிஸ் அடித்து கொன்ற அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல், நிதி உதவி

நேரில் சென்ற விஜய்.. போலிஸ் அடித்து கொன்ற அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல், நிதி உதவி

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் இருக்கும் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் கொடூரமாக தாக்கியதில் அவர் மரணம் அடைந்தார்.

மிளகாய்பொடி தூவி தண்ணீர் கூட கொடுக்காமல் அவரை மிக கொடூரமாக கொடுமைப்படுத்திய போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நடிகர் விஜய் போராட்டத்தை அறிவித்து இருந்தார்.

நேரில் சென்ற விஜய்.. போலிஸ் அடித்து கொன்ற அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல், நிதி உதவி | Vijay Meet Family Ajith Kumar Died Police Custody

இந்நிலையில் தற்போது விஜய் நேரில் சென்று அஜித் குமார் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அவர் வழங்கி இருக்கிறார்.

LATEST News

Trending News