நயன்தாராவிடம் 5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு! விடாமல் துரத்தும் திருமண வீடியோ சர்ச்சை

நயன்தாராவிடம் 5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு! விடாமல் துரத்தும் திருமண வீடியோ சர்ச்சை

நடிகை நயன்தாரா இதற்கு முன் நடிகர் தனுஷ் பற்றி கூறிய புகார் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது எல்லோருக்கும் தெரியும்.

தனது திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு நயன்தாரா ஒரு பெரிய தொகைக்கு கொடுத்து இருந்தார். அந்த வீடியோவில் நானும் ரௌடி தான் பட காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டார் நயன்தாரா, ஆனால் அதற்கு தனுஷ் தர மறுத்துவிட்டதாக நயன்தாரா புகார் கூறினார்.

அதன் பின் அனுமதி இல்லாமலேயே வீடியோவில் காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தி ரிலீஸ் செய்தார். அதற்கு நஷ்டஈடு கேட்டு தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நயன்தாராவிடம் 5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு! விடாமல் துரத்தும் திருமண வீடியோ சர்ச்சை | Case Against Nayanthara For Using Chandramukhi

இந்நிலையில் இதே ஆவணபடத்தில் சந்திரமுகி படத்தின் காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக அந்த படத்தின் பதிப்புரிமையை வாங்கி இருக்கும் ஏபி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

அந்த காட்சிகளை உடனே நீக்க வேண்டும், 5 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என கேட்டிருக்கின்றனர். இது பற்றி பதில் அளிக்க நயன்தாரா தரப்பு மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 

நயன்தாராவிடம் 5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு! விடாமல் துரத்தும் திருமண வீடியோ சர்ச்சை | Case Against Nayanthara For Using Chandramukhi

LATEST News