என்னது ஒரு நொடிக்கு ரூ.10 லட்சமா? இவ்வளவு சம்பளம் பெற்ற அந்த டாப் நடிகை.. இவரா?
சினிமாவில் தற்போது ஹீரோ மற்றும் நாயகிகளுக்கு அதிக சம்பளம் பெறப்பட்டு வருகின்றது. திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமாகவும் பல முன்னணி நடிகர், நடிகைகளுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், ஒரு நொடிக்கு 10 லட்சம் சம்பளம் பெரும் ஒரு தமிழ் முன்னணி நடிகை ஒருவர் குறித்து உங்களுக்கு தெரியுமா?
ஆம், அவர் தான் நடிகை நயன்தாரா. டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த விளம்பரம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் சுமார் இரண்டு நாட்கள் நடந்தது.
50 வினாடிகளுக்கு ஒளிபரப்பாகும் விளம்பரத்துக்கு சுமார் ரூ. 5 கோடி சம்பளமாக நயன்தாரா பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, ஒரு நொடிக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.