விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே பிரிவா? விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் சொன்ன உண்மை தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாக தொடர்ந்து பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. விஜய் தனது படங்களின் இசை வெளியிட்டு விழாவிற்கு தனது மனைவியை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஆனால், மாஸ்டர் படத்திற்கு பின் இருவரும் ஒன்றாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை என்பதால், பிரிவு குறித்து சர்ச்சை பரவியது. ஆனால், மறுபக்கம் இருவரும் பிரியவில்லை ஒன்றாக ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருகிறார்கள் என பத்திரிகையாளர்கள் சிலர் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான சஞ்சீவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் மற்றும் சங்கீதா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சஞ்சீவ் வெங்கட். இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராவார். அவருடைய மனைவி ப்ரீத்தியும் சின்னத்திரை நடிகை ஆவார். விஜய்யின் வீட்டிற்கு அருகேதான் சஞ்சீவ் வீடு உள்ளது.
இந்த நிலையில், விஜய்யின் வீட்டிற்கு அடிக்கடி சாப்பிட செல்வது குறித்து சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தி இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதில் "அடிக்கடி மீட் பண்றது விஜய் வீட்ல, அங்க போனா வகை வகையா சாப்பாடு இருக்கும். அவர் சமைக்க மாட்டார், அவர் மனைவி சங்கீதா இருப்பாங்க, அவங்க நல்ல சமைப்பாங்க" என கூறியுள்ளனர்.
மேலும் விஜய்க்கு என்ன வகையான உணவு மிகவும் என அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி கேள்வி கேட்க, "விஜய்க்கு மட்டன் பிரியாணி ரொம்ப புடிக்கும்" என சஞ்சீவ் கூறியுள்ளார். இதன்மூலம், விஜய் - சங்கீதா பிரிவு குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சஞ்சீவ், ப்ரீத்தி பேசியுள்ளனர்.