முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா முன்பு எப்படி உள்ளார் பாருங்க.. விளம்பர வீடியோ
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது இந்திய அளவில் டாப் நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
நடிகையாக மட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த சுபம் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.
தற்போது, நடிகை சமந்தா பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை காதலித்து வருகிறார் என பாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர்கள், நடிகைகளின் அன்ஸீன் புகைப்படங்கள் அல்லது ரசிகர்கள் பலரும் பார்த்திராத வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவந்து வைரலாவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிப்பதற்கு முன் மஞ்சள் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த விளம்பரத்தின் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ,