ரிலீசுக்கு முன்பே LEO-வின் வாழ்நாள் வசூலை தூக்கி சாப்பிட்ட COOLIE..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14, 2025 அன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
இப்படத்திற்கான முன்பதிவு ஆகஸ்ட் 8 அன்று இரவு 8 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, தமிழகத்தில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்து, அனைத்து காட்சிகளும் ‘ஹவுஸ்ஃபுல்’ ஆனதாக திரையரங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
‘கூலி’ திரைப்படம், முன்னதாக ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் 900 திரைகளில் வெளியான சாதனையை முறியடித்து, ஆயிரம் திரைகளில் திரையிடப்படுகிறது.
முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து, விஜய்யின் ‘லியோ’ படத்தின் மூன்று நாள் ‘ஹவுஸ்ஃபுல்’ சாதனையை உடைத்து, நான்கு நாட்களுக்கு ‘ஹவுஸ்ஃபுல்’ காட்சிகளாக மாறியுள்ளது.
இந்தியாவில் புக்மைஷோ, பேடிஎம், டிக்கெட் நியூ உள்ளிட்ட தளங்களில் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் காட்சிகள் தொடங்குகின்றன, கேரளா மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கு முதல் காட்சிகள் உள்ளன.
இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஆமிர் கான், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம், ஆகஸ்ட் 15 சுதந்திர தின நீண்ட வார இறுதியைப் பயன்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.