15 வயசில் ஹீரோயின்.. அந்த உறுப்பில் ஹார்மோன் ஊசி.. தோழியின் கணவருடன் திருமணம்.. ஹன்சிகாவிற்கு வந்த சிக்கல்..

15 வயசில் ஹீரோயின்.. அந்த உறுப்பில் ஹார்மோன் ஊசி.. தோழியின் கணவருடன் திருமணம்.. ஹன்சிகாவிற்கு வந்த சிக்கல்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் (ஆகஸ்ட் 09, 2025) தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார்.

குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கி, பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஹன்சிகாவுக்கு, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

1991ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த ஹன்சிகா, தொழிலதிபர் பிரதீப் மோத்வானி மற்றும் தோல் மருத்துவர் மூனா மோத்வானி ஆகியோரின் மகளாவார். பெற்றோரின் விவாகரத்திற்கு பிறகு, தனது தாய் மற்றும் அண்ணனுடன் மும்பையில் வசித்து வந்த ஹன்சிகா, பள்ளிப்படிப்பை முடித்தார்.

படிக்கும் காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக ‘கோயி மில் கயா’ படத்தில் ஹிரித்திக் ரோஷனுடனும், ‘ஹம்கோன்ஹை’ படத்தில் அமிதாப் பச்சனுடனும் நடித்து கவனம் ஈர்த்தார்.2007ஆம் ஆண்டு, வெறும் 15 வயதில் தெலுங்கு படமான ‘தேசமுதுரு’ மூலம் அல்லு அர்ஜுனுடன் கதாநாயகியாக அறிமுகமானார்.

அப்போது அவரது தோற்றம் குறித்து எழுந்த ஹார்மோன் ஊசி சர்ச்சை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, 2011ஆம் ஆண்டு ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுடன் இணைந்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி அடையாளத்தை பெற்றார்.2022ஆம் ஆண்டு, தனது நீண்ட நாள் நண்பரான தொழிலதிபர் சோகேல் கதோரியாவை, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும், இவர்களின் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. சோகேல் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னரே ஹன்சிகாவை திருமணம் செய்ததாகவும், இதில் ஹன்சிகாவின் பங்கு இருப்பதாகவும் வதந்திகள் பரவின.

மேலும், திருமணத்திற்கு பிறகு ஹன்சிகாவும் சோகேலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தற்போது ஹன்சிகா தனது தாயுடனும், சோகேல் தனது பெற்றோருடனும் தனித்தனியாக வசிப்பதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

இது குறித்து ஹன்சிகா எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, தனது 34வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த நாளில், ரசிகர்களின் அன்பையும் வாழ்த்துக்களையும் பெற்று மகிழ்ச்சியில் உள்ளார்.

அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

LATEST News

Trending News