திருமணமாகாமல் 5 குழந்தைகள் பெற்ற காதலி!! நிச்சயத்தை முடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து விளையாட்டின் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்து விளையாடி கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் ரொனால்டோ, இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள், வீடியோ விளம்பரங்கள் மூலமும் சம்பாதித்து வருகிறார்.
2015ல் இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஒன்றாக இருந்து பிரிந்தனர். பின் 2016ல் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக ஆரம்பித்து லிவ்விவ் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார்.
திருமணமே செய்யாமல் 5 குழந்தைகளை பெற்றெடுத்தனர் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ். தற்போது தன் காதலியை நிச்சயம் செய்து மோதிரம் மாற்றிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரொனால்டோ. விரைவில் இருவரின் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.