லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா

லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா

பாலிவுட்டில் பிரபல நடிகை கங்கனா ரணாவத். தமிழில் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பா.ஜ., எம்பியாகவும் உள்ளார். பாலிவுட் சினிமா மற்றும் நடிகர்களை அதிகம் சாடுபவர் நடிகை கங்கனா ரணாவத்.

அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛பாலிவுட்டில் உள்ள அநேக நடிகர்கள் அநாகரிகமானவர்கள். பாலியல் தொல்லையை மட்டும் கூறவில்லை, படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார்கள், நடிகைகளை கீழ்த்தரமாக நடத்துவார்கள். டேட்டிங் மற்றும் லிவ் இன் உறவுகள் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. அதுபோன்ற செயலிகளில் ஒரு போதும் நான் சேர மாட்டேன். அவை நமது சமுதாயத்தின் சாக்கடைகள். இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் வாழ்வில் தோல்வியுற்றவர்களாக இருப்பார்கள். லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆண்கள் வேட்டைக்காரர்கள், அவர்கள் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு ஓடி விடுவார்கள்'' என தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News