வெறித்தனம்.. தரமான பதிலடி.. ஹீரோயின்களுக்கு ஏன் சம்பளம் குறைவு.. அமீர் கான் அதிர வைக்கும் பதில்..

வெறித்தனம்.. தரமான பதிலடி.. ஹீரோயின்களுக்கு ஏன் சம்பளம் குறைவு.. அமீர் கான் அதிர வைக்கும் பதில்..

சமீபத்தில் ஊடகம் ஒன்றின் பேட்டியில் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டார் அவருடன் முன்னணி பாலிவுட் நடிகைகளான ராணி முகர்ஜி மற்றும் கரீனா கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் சினிமாவில் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவு. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது அங்கு அமர்ந்திருந்த நடிகைகள் ராணி முகர்ஜி மற்றும் கரீனா கபூர் இருவரும் இது நியாயமற்றது. இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் ஹீரோயின்களுக்கு கிடைப்பதில்லை. இது அநியாயம், பாலின பாகுபாட்டின் ஒரு பகுதி என்று கூறினார்கள்.

இதே கேள்வியை அங்கு அமர்ந்திருந்த நடிகர் அமீர்கான் இடமும் கேட்டார்கள். அதற்கு அமீர்கான் கொடுத்த பதில் நடிகைகள் ராணி முகர்ஜி மற்றும் கரீனா கபூரை வாயடைக்க செய்துவிட்டது.

இறுதியில், ஆம் நாங்கள் ஆமீர் கான் சொன்னதை ஏற்றுக்கொள்கிறோம் என்று இருவரும் சரணடைந்து விட்டார்கள். அப்படி ஒரு பதிலை ஆமீர்கான் கொடுத்திருக்கிறார்.

அவர் என்ன கூறினார் என்று பார்க்கலாம். அவர் கூறியதாவது, நான் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. ராணி முகர்ஜி என்னுடைய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

இவர் பெண் என்பதால் இவருக்கு குறைவான சம்பளம் கொடுக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். ஆனால், என்னுடைய படத்தில் பணியாற்றக்கூடிய லைட் மேனுக்கு எவ்வளவு சம்பளம்..? அவரும் ஆண் தானே..? அவரும் அந்த படத்தில் தானே வேலை செய்கிறார்..?

இங்கே பாலின பாகுபாடு வித்தியாசம் இல்லை சினிமாவை ஆண்கள் ஆளுகிறார்கள் என்பது தவறு. சம்பளம் எதைப் பொறுத்து மாறுபடுகிறது என்பதுதான் இங்கே பேசப்பட வேண்டிய விஷயம். இப்போது ஆமீர்கான் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அவரால் தியேட்டரில் எத்தனை சீட் நிரப்ப முடியும் இதுதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிக்கிறது.

ராணி முகர்ஜி ஒரு படத்தில் நடிக்கிறார் கரீனா கபூர் ஒரு படத்தில் நடிக்கிறார் அவர்களால் நான்கு நாட்கள் ஹவுஸ் புள் காட்சிகள் ஓடும் அனைத்து சீட்களும் நிரம்பிவிடும் என்ற சூழ்நிலை வரும்போது கரீனா கபூருக்கும் நான் வாங்க கூடிய அதே சம்பளத்தை கொடுப்பார்கள்.

இதுதான் சம்பளத்தை தீர்மானிக்கிறது. தவிர, ஆண், பெண், கடினமாக உழைக்கிறார்கள், எளிமையாக உழைக்கிறார்கள், இதெல்லாம் இங்கே விஷயம் கிடையாது என பேசியிருக்கிறார்.

இந்த பதிலை கேட்ட ராணி முகர்ஜி மற்றும் கரீனா கபூர் இருவரும் நாங்கள் அமீர் கான் சொன்னதை ஏற்றுக்கொள்கிறோம் என்று சரணடைந்து விட்டார்கள.்

LATEST News

Trending News