உச்ச நடிகருக்கு விழுந்த அடி.. அந்த நடிகருக்கு ஏகப்பட்ட நிம்மதியா?.. 50 வருஷமாக தொடரும் தொழில் பகை!
உச்ச நடிகரும் அந்த உலக நடிகரும் ஒரே பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவர்கள்தான். இருவருக்குள்ளும் என்னதான் நட்பும் அன்பும் இருந்தாலும், தொழில் போட்டி என்பது ஆயிரங்களில் இவர்கள் சம்பாதிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. ஆயிரத்தில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே ஏகப்பட்ட போட்டியுடன் இருந்தவர்களுக்கு, கோடிகளில் விளையாடும் போது இருக்காதா என்ன? இப்போதும் அந்த போட்டி இருந்து கொண்டே இருக்கிறது,
சில மாதங்களுக்கு முன்னர் உலக நடிகரின் படம் ஒன்று வெளியானது. அவரது அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால் அடி என்றால் அடி உங்க வீட்டு அடி இல்லை எங்க வீட்டு அடி இல்லை, உலக நடிகர் என்ற பேருக்கு ஏற்றபடி உலகமகா அடி. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய தோல்விப் படமாக அமைந்தது.
கடந்த ஆண்டு வெளியான உலக நடிகரின் படத்துக்கும் அடியோ அடி. அடுத்தடுத்து மிகப்பெரிய பிலாப் படங்களைக் கொடுத்து விட்டோமே என்று வருத்தத்தில் இருக்கிறார். இந்த வருத்ததினாலோ என்னவோ, இன்னும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்காமல் இருக்கிறார். இப்படி இருக்கும்போது தனது படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதைவிட கூடுதலான எதிர்பார்ப்பு உச்ச நடிகரின் படத்திற்கு இருந்தது.
ஆனால் உச்ச நடிகரின் படம் வெளியாகி அடி மேல் அடி விழுந்து கொண்டு உள்ளது. அதுவும் விமர்சன ரீதியாக படத்திற்கு ஏகப்பட அடி விழுந்து கொண்டு இருக்கிறது. பான் இந்தியா அளவில் படத்திற்கு வெற்றி கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கொண்டு இருந்த நிலையில், படத்திற்கு விமர்சன ரீதியாக அடி வாங்கிக் கொண்டு உள்ளது. ஆனால் படத்திற்கு வசூல் ரீதியாக ஓரளவுக்கு என்பதைக் காட்டிலும் நன்றாகவே வெற்றிப் படமாக மாறிக் கொண்டு உள்ளது. இது உலக நடிகருக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறதாம். அதாவது, வணிக ரீதியாக தோல்வி இல்லை என்றாலும், விமர்சன ரீதியாக தோல்வி என்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறதாம். அதே நேரத்தில் வணிக ரீதியான வெற்றி என்பதும் கொஞ்சம் கண்ணை உறுத்துகிறதாம்.