இலக்கியாவா இது? ஆளே மாறிட்டாங்களே..பேரழகி என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: இலக்கியா, டிக் டாக் செயலில் அதிக வீடியோ வெளியிட்டு பிரபலமானார். அதன் பின், இன்ஸ்டாவில் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இளம் ரசிகர்களின் இன்ஸ்டா குயினாக மாறிய இவர், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த இலக்கியா, குடும்பத்தின் பண நெருக்கடி காரணமாக திருப்பூரில் வேலை பார்த்தார். அதன்பின் சென்னை வந்த இவர், சினிமாவில் நடிக்கும் ஆசையில் இணையத்தில் ரீல்ஸ் வெளியிட்டார். பட வாய்ப்பை பெற இவர் கவர்ச்சியாக வீடியோவை வெளியிட்டு வந்தார். இதையடுத்து ஒரு சில படத்தில் கவர்ச்சியாக நடித்த இலக்கியாவை சிலர் பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதால், இனி சினிமாவே வேண்டாம் என மீண்டும் இணையத்தில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

டிக்டாக் இலக்கியா: அண்மையில் இலக்கியா அதிகளவு ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்ட தால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக எடுத்த ஊட்டச்சத்து மாத்திரைகளே உடல் பாதிப்புக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் மாற்றப்பட்டார். இந்த சம்பவத்துக்கு காரணமாக இலக்கியா தற்கொலைக்கு முயன்றதாகவும், இதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் காரணம் என சொல்லப்பட்டது.

பேரழகி இலக்கியா: மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் இலக்கியா. தற்போது அவர் ஆரஞ்சு மற்றும் மெரூன் நிறத்தில் இருக்கும் பட்டு பாவாடை தாவணியில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த உடைக்கு ஏற்றார் போல ஆபணரம், ஜிமிக்கி, கம்மல், வளையன் மற்றும் மல்லிப்பூ என பார்ப்பதற்கே மிகவும் அழகு பதுமைப்போல ஜொலிக்கிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் டிக் டாக் இலக்கியாவா இது? ஆளே மாறிட்டாங்களே? பேரழகி என வர்ணித்து வருகின்றனர். ரசிகர்கள் வர்ணிப்பதற்கு போல இலக்கியாக ஊஞ்சலில் அமைந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ பகிர்ந்த சிறிது நேரத்திலேயே லைக்குகளை குவித்து வருகிறது.