வெளிய தெரிஞ்சா அசிங்கம்.. நடிகை விலகி போனாலும் அடம்பிடிக்கும் நடிகர்.. எங்க போய் முடியுமோ?
இந்த நடிகை இளம் வயதில் இருந்தே நடித்து வருகிறார். டீன் ஏஜில் சினிமாவில் கால் வைத்தாலும் ஹீரோயின் மெட்டீரியலாக மாறியது அவரது 20 களுக்குப் பின்னர் தான். தமிழ் சினிமாவில் இருக்கும் முரட்டு சிங்கிள்கள் குறித்து பலரும் பேசும்போது, பொதுவாகவே ஆண்களைத்தான் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த நடிகையும் முரட்டு சிங்கிளாக, அதாவது திருமணம் மட்டும் செய்து கொள்ளாமல் உள்ளார்.
இந்த நடிகைக்கும் ஒரு நடிகருக்கும் நீண்ட ஆண்டுகளாகவே நெருக்கமான ரகசிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் நடிகை திருமணம் எதுவும் செய்து கொள்ளாமல் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. எப்படியும் மாதத்திற்கு ஒருமுறையாவது நடிகரும் நடிகையும் தனிமையில் சந்தித்துக் கொண்டு பேசிக் கொள்கிறார்களாம். சினிமாவில் நட்பாகத் தொடங்கிய இவர்களின் பழக்கம் இப்போது அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்வதிலும் சிக்கல் உள்ளது. அதாவது, நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி வாரிசுகள் எல்லாம் வந்தாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் அந்த வாரிசுகளும் நன்கு வளர்ந்து விட்டார்கள். இப்படியான நிலையில் நடிகரும் நடிகையும் திருமணம் செய்து கொண்டால், ஊர் உலகம் என்ன சொல்லும் என்று நினைத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தங்களது ரகசிய உறவை மெயின்டைன் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் நடிகை ஒரு கட்டத்தில் நடிகரை விட்டு விலக முடிவெடுத்துள்ளார். அதை நடிகரிடமே சொல்லியும் உள்ளார். அப்போது நடிகரோ போக வேண்டாம், கூடவே இரு என்று எல்லாம் கூறியுள்ளார். ஆனால் நடிகையோ, ' உனக்கு குடும்பம் உள்ளது. நான் திருமணம் செய்து கொண்டால்தான் என்னால் நிம்மதியாக வாழ முடியும்' என்று எல்லாம் பேசியுள்ளார்.
ஆனால் நடிகைக்கு இந்த நடிகரை விட நல்ல வைட்டான அரசியல்வாதி ஒருவர் பழக்கம் கிடைத்ததால் தான் நடிகை இப்படி முடிவெடுத்துள்ளார் என்றும் பேசி வருகிறார்கள். ஆனால் எப்படியோ அடம் பிடித்து நடிகர், நடிகையை தன்னுடனே வைத்துக் கொண்டு உள்ளார். நடிகைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை உள்ளதால், இருவரும் அதற்கும் என்ன செய்வது என யோசித்து வருகிறார்களாம். எல்லாம் எங்க போய் முடியுமோ என விபரம் தெரிந்தவர்கள் பேசி வருகிறார்கள்.