சன்னி லியோன் நடித்த படத்தின் 3ம் பாகத்தில் தமன்னா.. இப்போ கதையே தாறுமாறா இருக்குமே!

சன்னி லியோன் நடித்த படத்தின் 3ம் பாகத்தில் தமன்னா.. இப்போ கதையே தாறுமாறா இருக்குமே!

ராஹினி எம்.எம்.எஸ் மற்றும் ராஹினி எம்.எம்.எஸ் 2 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து தயாராக உள்ள மூன்றாவது பாகத்தில் தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமன்னாவின் ஹாரர் திரில்லர் படமான ''வான்'' படத்தின் படப்பிடிப்பின் போது இந்த படத்தின் ராகினி எம்எம்எஸ் 3 கதையை கேட்ட தமன்னா இந்த படத்தில் நடிக்க ஒகே சொல்லியதாக கூறப்படுகிறது.

ராஹினி எம்.எம்.எஸ் படத்தின் முதல் பாகம் 2011 ஆம் அண்டு வெளியானது. இதில், ராஜ்குமார் ராவ், ரஜத் கவுல், ஷெர்னாஸ் மற்றும் கைனாஸ் மோதிவாலா ஆகியோர் நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு, ராஹினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் சன்னி லியோன் நடித்திருந்தார். அவருடன் கைனாஸ் மோதிவாலா, ராஜ்குமார் ராவ், ரஜத் கவுல் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படம் இடம் பெற்ற 'பேபி டால்' பாடல் மூலம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு பாகங்களும் ஹாரர் மற்றும் சிற்றின்ப வகையைச் சேர்ந்தவையாக இருந்தன.

இதைத்தொடர்ந்து தற்போது, ராஹினி எம்.எம்.எஸ் 3 படம் அடுத்து உருவாக உள்ளது. ஏக்தா கபூர் இந்தத் தொடரை ஹாரர் மற்றும் காமெடி பாணியில் உருவாக்க முடிவு செய்துள்ளார். முந்தைய படங்களைப் போலல்லாமல், இந்தமுறை திகில்-காதல் கலவையான வகைமையிலிருந்து திகில்-நகைச்சுவை திரைப்படமாக மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், 'ராகினி எம்.எம்.எஸ். 3' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னா பாட்டியாவுடன் ஏக்தா கபூர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பல காலமாகவே மூன்றாவது பாகத்தை உருவாக்க அவர் திட்டமிட்டதாகவும், தற்போது ஒரு புதிய கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்றும், 'வன்' படப்பிடிப்புத் தளத்தில் தமன்னா பாட்டியாவுடன் ஏக்தா, ராகினி எம்.எம்.எஸ். 3 கதை பற்றிய யோசனை செய்ததாகவும், படத்தின் திகில் அம்சங்கள் கேட்ட தமன்னா வியந்து இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் வந்த பாடலைப் போல இந்த படத்திலும், தேசிய அளவிலான ஹிட் பாடலைத் கொடுக்க படக்குழு முடிவு செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ராகினி எம்.எம்.எஸ். வரிசையில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்பு இல்லாததால், பாலிவுட் பக்கம் சென்ற நடிகை தமன்னா பாட்டியா. 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' வெப் தொடரில் அதிரடியான கவர்ச்சி காட்டி ரசிகர்களை திணறடித்தார். தமன்னாவின் திடீர் கவர்ச்சி ஆட்டம் பேசு பொருளான போதும், அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்ததாக, தொடர்ந்து கவர்ச்சி காட்டி வருகிறார். தற்போது தமன்னா, சித்தாத் மல்ஹோத்ராவுடன் 'வன்' மற்றும் ஜான் ஆபிரஹாம் நடிக்கும் ரோஹித் ஷெட்டியின் அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகி, தனது மார்க்கெட்டை வலுப்படுத்தி வருகிறார்.

LATEST News

Trending News