மங்காத்தா ரீ ரிலீஸ்: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
2011ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மங்காத்தா படத்தை 15 ஆண்டுகளுக்கு பின் தற்போது ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்கம் திருவிழா கோலமாக மாறியுள்ளது.

ப்ரீ புக்கிங்கில் இருந்தே இப்படத்தின் வசூல் சாதனை படைக்க தொடங்கிய நிலையில், முதல் நாள் இந்தியாவில் மட்டுமே ரூ. 5.50 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது.
இதன்மூலம், இதுவரை தமிழில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படங்களிலேயே முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை அஜித்தின் மங்காத்தா படம் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுத்திருந்து பார்ப்போம், ரீ ரிலீஸில் இப்படம் மொத்தமாக எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்று.