புற்றுநோயால் பாதித்த தந்தை!! சீரியல் நடிகை ஆலியா மானசாவின் மறுப்பக்கம்...
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஆலியா மானசா. தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார்.
மாடலிங் துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஆலியா, 17 வயதிலேயே தன் தந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்ததால் அதை அப்படியே நிறுத்திவிட்டார். தந்தையின் மருத்துவச் செலவிற்காக சினிமா கனவைவிட்டு, சீரியல் துறைக்கு வந்தார் ஆலியா.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சினிமாவில் நடித்தால் தீபாவளி, பொங்கலுக்குத்தான் மக்கள் என்னை பார்ப்பார்கள், ஆனால் சீரியலில் தினமும் ஒரு குடும்பத்தில் ஒருத்தியாக பார்ப்பார்கள். அதுப்போதும் எனக்கு என்று ஆலியா தெரிவித்துள்ளார்.