இந்தா வந்துடுச்சு.. பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் பட்டியல்.. நீங்க எதிர்பார்த்த பெயர் இருக்கான்னு பாருங்க..!

இந்தா வந்துடுச்சு.. பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் பட்டியல்.. நீங்க எதிர்பார்த்த பெயர் இருக்கான்னு பாருங்க..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏழு சீசன்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல் ஹாசன், திரைப்பட பணிகள் காரணமாக இந்நிகழ்ச்சியில் இருந்து இடைவெளி விடுத்துள்ளார்.

கமல் திரும்புவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், விஜய் சேதுபதியின் தொகுப்பு மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு சீசனைப் போலவே, இந்த முறையும் சமூக ஊடகங்களில் போட்டியாளர்கள் பட்டியல் வைரலாகி வருகிறது.

இந்தப் பட்டியலில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இனியா, டான்ஸர் சிந்தியா வினோலின், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன், நடிகர் பால சரவணன், சீரியல் நடிகர் புவி அரசு, நிகழ்ச்சி தொகுப்பாளர் வினோத் பாபு ஆகியோரும்.

மேலும், குக் வித் கோமாளி 6 போட்டியாளர்களான ஷபானா ஷாஜஹான், உமைர் இப்ன் லத்தீஃப், சீரியல் நடிகை ஃபரினா ஆசாத், கூமாப்பட்டி தங்க பாண்டி, வி.ஜே. பார்வதி, மகாநதி சீரியல் நடிகை லக்ஷ்மி ப்ரியா, சோஷியல் மீடியா பிரபலங்கள் அரோரா சிங்களேர் மற்றும் இர்ஃபான் ‘என்ன சொல்லப் போகிறாய்’ பட நடிகர் அஸ்வின் குமார், திருமணம் சீரியல் நடிகர் சித்து சித் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் உள்ள 15 பேரில் ஒரு சிலர் நிச்சயம் பிக் பாஸ் 9 வீட்டிற்குள் நுழைவார்கள் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷபானா ஷாஜஹான் மற்றும் உமைர் இப்ன் லத்தீஃப் ஆகியோருக்கு பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என அழைக்கப்படும் டாக்டர் திவாகருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அவர் விதித்த நிபந்தனைகள் காரணமாக அவரை இந்த சீசனில் பார்ப்பது சந்தேகமே எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் மற்றொரு பெயர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால், தனது தனித்துவமான பாணியால் நிகழ்ச்சிக்கு புதிய கன்டன்ட் கிடைக்கும் எனவும், போட்டியாளர்கள் வகைவகையான உணவுகளை சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் இந்த சீசனில் பங்கேற்க வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி, விஜய் சேதுபதியின் “பாக்க பாக்க தான் புரியும், போக போக தான் தெரியும்” என்ற வசனத்துடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிகழ்ச்சி விஜய் டிவி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது. போட்டியாளர்களின் இறுதி பட்டியல் அக்டோபர் 5 ஆம் தேதி மேடையில் விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தும்போது தான் உறுதியாகத் தெரியவரும்.

அதுவரை, சமூக ஊடகங்களில் பரவும் இந்த பட்டியல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

LATEST News

Trending News