இரு குழந்தைகளுக்கு தாய்!! காலில் அடிபட்டு நடக்கமுடியாமல் கஷ்டப்படும் சீரியல் நடிகை ஆல்யா மானசா..
சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆல்யா மானசா, சீரியலின் கதாநாயகனான சஞ்சீவ்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் ஒரு மகளை பெற்றெடுத்த ஆல்யா, ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார். சீரியலில் இடையில் கர்பமான ஆல்யா, சீரியலில் இருந்து விலகி இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்தார்.

அதன்பின் உடல் எடையை கட்டுக்கோபாக வைத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், யூடியூப் சேனல் ஆரம்பித்து பல வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.
சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் இனியா என்ற சீரியலில் நடித்தார். சீரியல் முடிவுக்கு வந்தப்பின் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பாரிஜாதம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
பல விஷயங்களை செய்து வரும் ஆல்யா மானசா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். காலில் அடிபட்டு நடிக்க முடியாமல் நடந்து வருகிறார். தன்னுடைய அம்மா கஷ்டப்படுகிறார் என்பதால் இரு குழந்தைகளும் பத்திரமாக பிடித்துக்கொண்டு வரும் வீடியோவை தான் ஆல்யா பகிர்ந்துள்ளார்.