விருது விழா பிரம்மாண்டமாக நடக்க அடுத்தடுத்து 3 சீரியல்களை இழுத்து மூடும் ஜீ தமிழ்
படத்தில் நடித்த கலைஞர்களுக்காக எத்தனையோ விருது நிகழ்ச்சிகள் உள்ளது. ஆனால் சின்னத்திரை கலைஞர்களுக்கு அந்தந்த தொலைக்காட்சி நடத்தும் விருது விழாக்களை தாண்டி சில நிகழ்ச்சிகளே உள்ளது.
இந்த வருடம் ஆரம்பித்து சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை விருது விழா நடைபெற்று முடிந்துவிட்டது. விரைவில் ஜீ தமிழின் குடும்ப விருதுகள் ஒளிபரப்பாக உள்ளது, சமீபத்தில் தான் விருது விழா நடந்ததாக கூறப்படுகிறது.

இப்படி விருது விழா சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்க ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் ஜீ தமிழில் கெட்டி மேளம், நினைத்தாலே இனிக்கும் மற்றும் மாரி தொடர்கள் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.
சீரியல் முடியும் தகவல் ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது.
